தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ (Sundar Mahasri )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா'(Vaanganna Vanakkanganna ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சு திருநாவுக்கரசர் வெளியிட, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம். கே. மோகன் பெற்றுக்கொண்டார். இதன் போது திரைப்பட தயாரிப்பாளரும், விமர்சகரும், திரைப்படத்துறை ஆய்வாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன், ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, ‘லொள்ளு சபா’ ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் சுந்தர் மகாஸ்ரீ பேசுகையில், ” இந்த மேடையில் என்னுடைய அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன். இதற்காக நல்ல மனம் படைத்த சமூக நல சேவகர் புகழேந்தியை மேடைக்கு அழைக்கிறேன். இந்தப் படத்திற்கு ‘சூட்சகன்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்டாலின் இயக்குகிறார். தயாரிப்பாளர் சயீத் தயாரிக்கிறார்.

‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ படம் காமெடி படம் மட்டுமல்ல நல்லதொரு கருத்தும் இருக்கிறது. நான் பார்த்து உணர்ந்த வகையில் எங்கும் சாலை வசதி சரியாக இல்லை. குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏவாக இருப்பவரை உச்ச கட்ட காட்சியில் சாலையில் நடக்க வைத்து சாலைகள் உள்ள குண்டும் குழிகளால் உண்டாகும் தர்ம சங்கடங்களை அவருக்கு உணர்த்தும் படம் தான் இது. அவரை சாலையில் நடக்க வைத்து.. நடக்கும் போது ஏற்படும் அசௌகரியங்களை காட்சிப்படுத்துவது தான் இப்படத்தின் நோக்கம். அதன் பிறகு மக்களுக்கு சாலை வசதி முக்கியம் என்பதை எப்படி ஒரு எம்எல்ஏ உணர்கிறார் என்பது தான் கதை.
இதற்கு காமெடியாகவும், பொழுது போக்காகவும் தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌ இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் வீட்டிற்கு பயணிக்கும் போது சாலைகளை ஒரு முறை பார்ப்பார்கள் என்பது உறுதி. அதுவே இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி. ” என்றார்.

20 நாளில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா 10 நாளில் சூட்சகன்

Leave a Reply

Your email address will not be published.