ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் திரை அரங்குகளில் ஓடி வெற்றி வாகை சூடி வசூல் சாதனை புரிந்த படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” மனிதன் ” திரைப்படம்.
மனிதன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார் படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதில்,
மனிதன் …. மனிதன்..
வானத்த பாத்தேன் …
தீபங்களே நீங்கள் …
காளை… காளை…
ஏதோ நடக்கிறது ….
முத்து .. முத்து.. பெண்ணே…
ஆகிய வைரமுத்துவின்
முத்தான பாடல்கள் சந்திர போஸ் இசையில் சூப்பர் ஹிட்டாக ரசிகர்கள் கொண்டாடிய பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் சந்திர போஸ் இசையில் வைரமுத்து வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி பட்டி முதல் சிட்டி வரை அனைவரையும் பாடவைத்ததும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி திரை உலகிற்கு வந்து இந்த வருடம் (2025) 50 வது வருட பொன்விழா ஆண்டாகும். அந்த பொன்விழா ஆண்டினை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு ” மனிதன்” திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் உருவாக்கி
38 வருடங்கள் கழித்து இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளி வருகிறது. இந்த தீபாவளி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள் இப்படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும்
குரு ராஜா இண்டர்நேஷனல்
நிறுவனத்தினர்.
என். விஜயமுரளி
PRO

Leave a Reply