Tamil Film Director Ameer Released Aruva Sanda Teaser Photos.

Director Ameer Released Aruva Sanda Teaser

ஆதிராஜனின் ‘அருவா சண்ட’ டீஸர்  இயக்குநர் அமீர் வெளியிட்டார்
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  புதுமுகம்  ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா  பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்தப்படம் காதல்  சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். கௌரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் பாண்டி  ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைக்க, வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். பரபரப்பான திரைக்கதையோடு உருவாகும் ‘அருவா சண்ட’ படத்தின் டீஸரை, இயக்குநர் அமீர் வெளியிட்டார். ’டீஸர் நன்றாக இருக்கிறது,  படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”  என்று அமீர் பாராட்டினார்.    ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை வி.ராஜா தயாரித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.