Superstar Rajinikanth and Nayanthara starring Darbar Movie First Look Poster. Directed by AR Murugadoss, Music by Anirudh, Produced by Lyca Productions.

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உள்ள படத்திற்கு ‘தர்பார்’ எனப் பெயர் வைத்து அதன் முதல் பார்வையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது இதுவே முதல் முறை. 11 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த்துடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.