AGS Cinemas Thalapathy 63 Directed By Atlee and Music By AR Rahman.
விஜய் நடிக்கும் தளபதி 63 பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
மேலும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர் விவேக், கதிர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர்கள் ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோரும் உள்ளனர். மேலும் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


Leave a Reply