மனோ கிரியேஷன் சார்பில் ஏ .ராஜா தயாரிப்பில் இயக்குநர் . எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன்,பவித்ரா, ,தீப்ஷிகா,சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘4த் ஃப்ளோர்’ .
ஆரி அர்ஜுனன், பவித்ரா இருவரும் லிவிங் டு முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில் மும்பையில் ஐடி நிறுவனத்தில் ஆரி வேலை பார்த்து வருகிறார்
ஆரிக்கு அவரது காதலி பவித்ரா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவசரமாக சென்னைக்கு வருமாறு அழைக்கிறார்
சென்னைக்கு வரும் ஆரி ராயல் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் தங்குவதற்கு பதிலாக நான்காவது தளத்தில் தங்குகிறார். மறுநாள் தொலைபேசியில் அழைக்கும் பவித்ரா செங்கல்பட்டில் இருக்கும் நீதிமன்றத்தில் தனது மாமாவை சந்திக்குமாறு கூறுகிறார். இதனையடுத்து அங்கு செல்லும் ஆரி அவரை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆரி தங்கி இருக்கும் நாலாவது மாடியில் சிலர் தங்கி இருக்கிறார்கள். இதே வேளையில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது, இதையடுத்து ஆரி உண்மை நிலையை அறிய முயற்சி மேற்கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் நான்காவது மாடியில் இருந்தவர்கள் அனைவரும் இருந்திருப்பதை பார்த்து ஆரி அதிர்ச்சி அடைகிறார். இதே வேளையில் பவித்ராவை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. பவித்ரா மூலம் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை ஆரி கண்டுபிடிக்கிறார்.
இறுதியில் ஆரி பவித்ராவை கண்டுபிடித்தாரா? இல்லையா ? பவித்ராவுக்கு நடந்தது என்ன? பெண் குழந்தையை ஆரி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதே ‘4த் ஃப்ளோர்’ படத்தின் மீதிக்கதை.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்திருக்கும் ஆரி அர்ஜுனன் நடை, உடை பேச்சு , உடல்மொழி என அனைத்திலும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதலியை தேடி அலைவது, பெண் குழந்தையை பார்த்து அழுவது, அதிரடி சண்டை என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆரி காதலியாக நடித்திருக்கும் பவித்ரா அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். மற்றொரு நாயகியாக வரும் ,தீப்ஷிகா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்,
வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பவித்ரா உறவினராக வரும் தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் . யூடியூப்பராக வருபவர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்ணணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உளள்து. லக்ஷ்மன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் மர்ம கொலைகளை மைய கருவாக வைத்து ஒரு ஹாரர் சஸ்பென்ஸ், திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இத்திரைப்படத்தில் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் அப்பாவி மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘4த் ஃப்ளோர்’ – சஸ்பென்ஸ், த்ரில்லர் அனுபவம்
மதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : அர்ஜுனன்,பவித்ரா, ,தீப்ஷிகா,சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர்
இசை : தரண் குமார்
இயக்கம் : எல்.ஆர்.சுந்தரபாண்டி
மக்கள் தொடர்பு : ஏ .ராஜா