புதுவையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்த, திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்கின்ற இவர், உலக கராத்தே பெட்ரேஷினில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து, ஆசியாவின் ‘ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ தென்ஆசிய நாடுளின் ‘ரெப்ரிக் கமிஷன் சேர்மனாகவும்’ – ‘காமன்வெல்த் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ – அமீரகத்தில் இருக்கும் ‘UAE. கராத்தே பெட்ரேஷனில் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினாராகவும்’ – ‘இந்திய முன்னால் ரெப்ரிக் கமிஷன் சேர்மனாக’ இருந்தவரும்,திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்பவர், இப்பொழுது நடைபெற்று வருகிற ஒலிம்பிக் கராத்தே போட்டிக்கான… ‘ரெப்ரி டெக்னிகலுக்காக’ பல நாடுகள் சென்று இருக்கிறார்!

இதில் குறிப்பாக, இந்த இருபது ஆண்டுகளில், இவரை ஆசியாக் கண்டத்திலிருந்து பரிந்துரைத்து உலக கராத்தே பெட்ரேஷனுக்கு அனுப்பப்பட்டது! ஐந்து continental – இருந்து (கராத்தே என்ற வார்த்தைய உருவாக்கிய ஜப்பானும் இதில் ஒரு அங்கம் வகிக்கிறது) இந்த ஐந்து continental உள்ள, பிரசிடென்ட் – சேர்மன் அவர்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட, இந்த ஐந்து நடுவர்களை மட்டுமே உலக கராத்தே பெட்ரேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அவர்கள் இரண்டு முறை வெவ்வேறு நாடுகளில், இந்தக் கரோனா காலத்திலும் மிகப் பாதுகாப்பாக அழைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன!

தேர்வுகளை நடத்திய நாடுகள்.
Turkey Istanbul – March 12 to 14th 2021.
Portugal Lisbon – 30th April to 2nd May 2021.

இந்த இரண்டிலும் தேர்ச்சி அடைந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற, பதினாறு பேர்களைத் தேர்வு செய்யப்பட்டு, அந்தப் பதினாறு நபர்களும் ஒலிம்பிக் நடுவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்! அதில் தமிழகத்தைச் சேர்ந்த திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

அதன்பின் ஒலிம்பிக்கில் நடுவராக எவ்வாறு செயல்பட வேண்டுமோ, அதற்கான முன்னோட்டத்தை… தேர்வு செய்யப்பட பதினாறு நடுவர்களை வைத்தே, அனைத்து ஃபைனல்களையும் நடத்தி இறுதி செய்தனர்! ஒலிம்பிக் கோலிஃபிக்கேஷன் டோரனமென்ட் என்று – France Paris – june 11th to 13th 2021 -ல், நடை பெற்றது. அதிலும் தன்னை முன்னிறுத்திக் காட்டினார், திரு.பாஸ்கர் சீனுவாசன். உலகத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதினாறு பேர்கள் மட்டுமே தேர்வானார்கள். அதில் ஒருவராய் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர், தேர்வாகி இருப்பது நமக்கு பெருமை சேர்க்கிறது!

இதில் குறிப்பிட வேண்டியது நமது இந்தியக் கராத்தே சங்கம், இந்திய ஒலிம்பிக் கமிட்டியில் அங்கீகாரம் இல்லாமல் இருப்பதால், இந்தியாவில் இருந்து எதுவும் செயல்பட முடியாத சூழ்நிலை! குறிப்பு – அதனால் UAE. அரசு மூலமே இவர் ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆசிய கராத்தே சம்மேளனத்தின் ஜென்ட்ரல் திரு நாசர் என்பவர் மூலமாக பிரான்ஸ் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்!

திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் 2019 ஆம் ஆண்டு வெளியான ” கைலா ” என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்று தமிழகம் வந்தவுடன் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு தமிழரை ஒலிம்பிக் வரை கொண்டுச் சென்ற, அமீரகத்திற்கு தமிழிராக நாம் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்!

Leave a Reply

Your email address will not be published.