ஜீரோ-கமிஷனில் கேப் சேவை, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஓட்டுநர்களுக்கு டைரக்ட் பேமெண்ட்

  • அனைத்து முக்கிய கேப் தொழிற்சங்கங்களின் வலுவான ஒப்புதல் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை உறுதிமொழி
  • விரைவான புக்கிங், குறைந்த ரத்துக்கள், மலிவு விலை மற்றும் நல்ல சேவையை வழங்க உறுதியளிக்கிறது.
    15,000 கேப் ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர்; மூன்று மாதங்களில் மேலும் 50,000 இலக்கு.

சென்னை, மே 2, 2024: இந்தியாவின் மிகப்பெரிய ஓப்பன் மொபிலிட்டி செயலியான தெரிவித்தனர்.நம்ம யாத்ரி சென்னையில் கேப் சேவைகளை அறிவிக்கிறது. தற்போதைய புக்கிங் செயலிகளில் உள்ள அதிக கமிஷன்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையில்லா நிலையை அகற்ற, வாழ்நாள் முழுவதும் ஜீரோ கமிஷன், டைரக்ட்-டு-டிரைவர் பேமெண்ட் மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. மக்களை முன்னிலை படுத்திய அணுகுமுறை கொண்ட இந்த செயலி, ஓட்டுநர் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பயணிகளுக்கான விலைகளை குறைக்கிறது, வாகன பராமரிப்பை மேம்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துகிறது. ONDC இல் முன்னணி செயலியான நம்மயாத்ரி தனது ஒபப்ன் டேட்டா (open data) மற்றும் ஒபப்ன் சோர்ஸ் சாப்ட்வேர் (open source software) மூலம் 100% வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. மேலும், இந்தியாவில் ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP – Minimum Support Price) அமல்படுத்திய முதல் செயலியாக நம்மயாத்ரி திகழ்கிறது. இதனால் நியாயமான விலை நிர்ணயம் செய்து விலைவாசி உயர்வு ஏற்படும் போது ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கபடுகிறது. மேலும் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரும் சமமாக பயனடைகின்றனர்.

முதன்முறையாக, சென்னையில் உள்ள அனைத்து முக்கிய கேப் மற்றும் டாக்சி தொழிற்சங்கங்களும் ஒன்றுகூடி ஒரு புதிய செயலியின் வெளியீட்டுக்கு ஆதரவளித்துள்ளன. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு “சூப்பர் சர்வீஸ்” உறுதிமொழியளித்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய பிரமுகர்களான சாலை பொதுச் செயலாளர் வி.குப்புசாமி போக்குவரத்து கூட்டமைப்பு – சிஐடியு; ஏ.ஜாஹிர் உசேன், உரிமைக் குரல் ஓட்டுனர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஒன்றியம்; வெற்றிவேல், உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்; முஸ்தபா, பொதுச் செயலாளர் அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை ஒன்றியம்; டில்லி பாபு, பீக் டிரைவர்கள் சங்க தலைவர்; மற்றும் செல்வம், நியூ அக்னி விங்ஸ் டிரைவர் யூனியனின் தலைவர், ஆகிய அனைவரும் நம்மயாத்ரிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

சென்னை கேப்/டாக்சி சங்கங்கள் நம்ம யாத்ரியுடன் கைகோர்த்து ஜீரோ கமிஷன் சவாரிகள் வழங்குகின்றன

Leave a Reply

Your email address will not be published.