ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிட். தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் ; கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி ஆகியோர் நடிப்பில் வெளி வர இருக்கும்   ‘தலைமைச் செயலகம்’ இந்த தொடர் சுமார் 8 எபிசோட்களை கொண்டது. மே  17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாக இருக்கிறது.

தமிழக முதல்வராக இருக்கும்  கிஷோர்  மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு   விரைவில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர். இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது  ஓரிரு மாதங்களில் தீர்ப்பு வரும் என்று கூறப்படுகிறது. இதனால், கிஷோரின் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுகிறது.

கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக  கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது மறுபக்கம் சென்னையில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கத் துவங்குகிறார் போலீஸ் உயரதிகாரி பரத். .

இந்நிலையில்  கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.ஒரு கட்டத்த்தில் விமான விபத்தில் முதல்வர் கிஷோர் உயிர் இழக்கிறார். இறுதியில்  முதல்வர் பதவியை கைப்பற்றியது யார்/  முதல்வர் மரணத்திற்கு காரணம் யார்/ என்பதே ‘தலைமைச் செயலகம்’  இந்த இணையத் தொடரின் மீதிக்கதை.

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் அனுபவ  நடிப்பின் மூலம்  அந்த கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். முதல்வருக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷ்ரேயா ரெட்டி. நடிப்பு படத்திற்கும் மிகப்பெரிய பலமாக இருக்கிறதது. “கொற்றவை” கதாபாத்திரத்திற்கு சரியாக  பொருந்தியிருக்கிறார்

போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், . சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் முதல்வரின் மகளாக வரும் ராமயா நம்பீசன் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

ஜிப்ரானின் பாடல்களும் பின்னணி இசையும் கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள்  கண்களுக்கு விருந்தளிக்கிறது

மொத்தத்தில் ‘தலைமைச் செயலகம்’  நாற்காலி சண்டை

மதிப்பீடு 3 / 5

நடிகர்கள்: கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி

இசை : ஜிப்ரான்

இயக்கம்: வசந்தபாலன்

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா 

Leave a Reply

Your email address will not be published.