ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம். இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், இளவரசு, புகழ்,  சிங்கம்புலி தீபா, ஞானசம்பந்தம்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “டி எஸ் பி”

திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கடை வியாபாரி  இளவரசு  இவருடைய  மகன் விஜய்சேதுபதி. அரசு வேலைக்குதான் செல்ல வேண்டும் என்று ஒரு லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் நாயகி அனுகீர்த்தியுடன் விஜய் சேதுபதிக்கு பழக்கம் ஏற்படுகிறது. நாளடைவில் இது காதலாக மாறுகிறது. விஜய்சேதுபதியில் நெருங்கிய நண்பரின் தந்தை கொலை செய்யப்படுகிறார். எப்படியாவது கொலையாளியை தண்டிக்க சட்டமுயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதிக்கு தோல்வியே கிடைக்கிறது.

இதே வேளையில்  விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது. இதற்காக வேறு ஊரில் இருந்து திண்டுக்கல்லுக்கு விஜய் சேதுபதியின் நண்பர்கள் வருகிறார்கள். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக இருக்கும் பிரபாகருக்கும் மோதல் ஏற்படுகிறது.

இந்த சண்டையில் விஜய் சேதுபதி வில்லன் பிரபாகரனை மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பிரபாகர், விஜய் சேதுபதியை கொன்றே தீருவேன் என்று முடிவெடுக்கிறார்.   ஒரு கட்டத்தில் டிஎஸ்பி.,யாக மாறி, வில்லனை எதிர்கொள்கிறார் விஜய் சேதுபதி அதன் பிறகு விஜய் சேதுபதி  –  வில்லன் மோதலில் ஜெயிப்பது யார் ?  என்பதே “டி எஸ் பி” படத்தின் மீதிக்கதை.

 நாயகனாக வரும் விஜய் சேதுபதி வழக்கம் போல  தன் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.சேதுபதி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் வந்த விஜய் சேதுபதி இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக வந்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ஃபெமினா மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற அனுகீர்த்திவாஸ் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். வழக்கமான கதாநாயகி போல வந்து செல்கிறார். நகைச்சுவை நடிகராக வரும் புகழ் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்  அதில் அவருக்கு  வெற்றி கிடைக்கவில்லை.விஜய்  சேதுபதியின் தந்தையாக வரும் இளவரசு, வில்லனாக வரும்  பிரபாகரன் ஆகியோர் தங்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசையமைப்பாளர் டி .இமான் இசையில் பாடல்கள்  கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன்  ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த்திருக்கும் படம். ஒரு  கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம். காமெடி, ஆக்ஷன் என திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்து இருக்கிறார்  கதை மற்றும் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்திருந்தால் இப்படம்  இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், ஷிவானி நாராயணன், இளவரசு

இசை: டி .இமான்

இயக்கம்: பொன்ராம்.

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.