வேலன் புரடக்ஷன்ஸ் சார்பில் வி எம் முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘‘வெப்’

ஷில்பா மஞ்சுநாத், ஷஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மது,போதைப் பொருள்கள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இதற்கிடையே தனது நிறுவனத்தில் பணியாற்றும் புதிதாக திருமணமான அனன்யா மணியை பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாயகன் நட்டி இவர்களை கடத்தி,விட அதில் புதிதாக திருமணமான அனன்யா கொடூரமாக கொலை செய்துவிடுகிறார்.

இதனை பார்த்த மற்ற 3 பெண்களும் மிகவும் பயந்துவிடுகின்றனர். உடனே அங்கிருந்து இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். இறுதியில் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, இல்லையா? நட்டி இவர்களை கடத்தியதற்கான காரணம் என்ன? என்பதே ‘வெப்’ படத்தின் மீதிக்கதை.

வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் நட்டி தன் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அதிகம். அதைச் சரியாகப் பிடித்துக் கொண்டு நன்றாக நடித்து நல்லபெயர் பெறுகிறார் ஒரே மாதிரியான ரியாக்‌ஷன் கொடுத்து முதல் பாதியில் நம்மை சோதிக்கிறார். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.

நாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்விபாலா சுபபிரியாமலர்,அனன்யாமணி ஆகியோர் கவர்ச்சியில் இளைஞர்களைக் கவர்கிறார்கள். கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் முயற்சி செய்திருக்க கே உம நான் கடவுள் ராஜேந்திரன், முரளி ஆகியோர் நடிப்பு படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜாவின் இசையில், அருண் பாரதி, ஆர்ஜே விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோரது வரிகளில் பாடல்கழும் ஆட்டம் போடவைக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. கிறிஸ்டோபர் ஜோசப்பின் ஒளிப்பதிவு, குறைந்த வாய்ப்பில் நிறைந்த காட்சிகளை வழங்கியிருக்கிறது. நாயகிகளின் கொண்டாட்டம் பார்வையாளர்களுக்கும் பற்றும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இயக்குநர் ஹாரூன், இனறைய சமூதாயத்தில் குடி மற்றும் போதை மருந்துகள் பயன் படுத்துவதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளை இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் படத்தை கொடுத்திருக்கிறார்.முதல்பாதி ஒரே இடத்தில் பயணிக்கும் திரைக்கதை , இரண்டாம் பாதியில் கொஞ்சம் நம்மை தெளிய வைக்கிறது.

மொத்தத்தில் ‘‘வெப்’ பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : நட்டி நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, நந்தினி மாதேஷ், ஷஷ்வி பாலா, மொட்டை ராஜேந்திரன்

இசை : கார்த்திக்ராஜா

இயக்கம் : ஹரூன்

மக்கள் தொடர்பு : KSK செல்வா

Leave a Reply

Your email address will not be published.