அரபி புரொடக்ஷன்ஸ் & வியன் வெஞ்சர்ஸ் – ரஜீஃப் சுப்பிரமணியம் & வினோத் ராஜேந்திரன் தயாரிப்பில் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் வினோத் ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சார்லி, செண்ட்ராயன், தாரணி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஃபைண்டர்’
மீனவர் குப்பத்தில் மீன்பிடித் தொழிலைச் செய்து வரும் சார்லி மனைவி மகளுடன், கிடைக்கும் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் சார்லி மக்களிடம் சீட்டுப் பணம் வாங்கி சீட்டு கட்டி வருகிறார். சீட்டு பணத்தை வாங்கியவர் சார்லியை ஏமாற்றி விட்டு ஓடி விடுகிறார். இதனால் ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் பணத்தை திருப்பி கேட்கிறார்கள்.
பணத்திற்கு என்ன செய்யவதென்று தெரியாமல் நிற்கும் சார்லிக்கு உறவினர் செண்ட்ராயன், மூலம் செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார். 6 மாதத்தில் வெளியே வந்து விடலாம் என்று ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் . அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம்,ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது.
இதனையடுத்து சார்லியின் வழக்கை கையில் எடுக்கும் நாயகன் வினோத் ராஜேந்திரன் சார்லி நிரபராதி என்பதை நிரூபித்தாரா? இல்லையா? எனபதே ’ஃபைண்டர்’ படத்தின் மீதிக்கதை.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி தன் அனுபவ நடிப்பின் மூலம் முழுப்படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார். குடும்ப கஷ்ட்டத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் இடங்களில் நம்மையும் அழ வைக்கிறார்
டிடெக்டிவ் நிறுவனம் நடத்தி வருபவராக நடித்திருக்கும் நாயகன் வினோத் ராஜேந்திரன் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். அவரது உதவியாளராக வரும் தாரணியும் சிறப்பாக இருக்கிறது. முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் செண்ட்ராயனுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்..
சூர்ய பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. பிராசந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாக உள்ளது.
ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அனைவரும் சிரிக்கும் விதத்தில் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஃபைண்டர்’ உண்மை ஒருநாள் வெல்லும்
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் வினோத் ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சார்லி, செண்ட்ராயன், தாரணி
இசை : சூர்ய பிரசாத்
இயக்கம் : வினோத் ராஜேந்திரன்
மக்கள் தொடர்பு : ராஜா
Leave a Reply