3S பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா ஆர் இயக்கத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆலன்’

சிறுவயதில் விபத்து ஒன்றில் பெற்றோர் மற்றும் உறவினர்களை இழக்கும் நாயகன் வெற்றி காசிக்கு சென்று விடுகிறார்  பல வருடங்களாக அங்கு ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இருந்தாலும் சிறு வயதில் ஏற்பட்ட விபத்து அவரது நினைவில் அவ்வப்போது வந்து சென்று நிம்மதி இல்லாமல் ஆக்குகிறது.

நாயகன் வெற்றிக்குள்  இருக்கும் எழுத்துத் திறமையும் ஆன்மீகத்தை தொடர முடியாமல் செய்ய  இதை அறிந்த, வெற்றியின்  குரு ஹரிஷ் பெராடி இனி நீ ஆன்மீகவாதியாக வாழாமல் சாதாரண மனிதனாக வாழ்ந்து கொள் என கூறுகிறார். இதனால் வாரணாசியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் வெற்றி இரயிலில் ஜெர்மனி  பெண்ணான நாயகி மதுராவை சந்திக்க இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மலர்கிறது. இந்நிலையில் நாயகி மதுரா, தமிழ் மொழி ஆராச்சிக்காக பாண்டிச்சேரி செல்கிறார். சென்ற இடத்தில் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறார். இதே வேளையில் சென்னையில் இருக்கும் நாயகன் வெற்றி போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.

இறுதியில் நாயகி மதுராவை கொலை செய்த குற்றவாளிகளை  போலீஸ் கண்டுபிடித்ததா ? இல்லையா? நாயகன் வெற்றி தான் எழுதிய புத்தகத்தை வெளியிட்டாரா? இல்லையா? என்பதே  ’ஆலன்’  படத்தின் மீதிக்கதை..

தியாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி ஆன்மீகவாதி மற்றும் எழுத்தாளர் என இரண்டு கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டிலும் வேறுபட்ட நடப்பை கொடுத்திருக்கிறார். எப்போதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்கும்  எடுக்கும் வெற்றி இதிலும் அதை நிரூபித்து இருக்கிறார்.

ஜெர்மன் பெண்ணாக நடித்திருக்கும் நாயகி மதுரா ,அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாரா பார்ப்பதற்கு அழகாகவும் கண்களாலே பேசி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மனோஜ்  கிருஷ்ணாவின்  இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை  கதைக்கு ஏற்றவாறு  பயணித்திருக்கிறது. விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு  கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது.

ஒரு விபத்து மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குநர் சிவா.ஆர் படத்தின் முதல் பாதி ஆன்மிகம், காதல், தோல்வி என செல்ல இரண்டாம் பாதி சிறுவயது காதல், புத்தம் வெளியீடு  என அழகாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.

மொத்தத்தில் : ’ஆலன்’  அன்பு  வழியை நோக்கி ஒரு பயணம்

மதிப்பீடு : 2.5/ 5

நடிகர்கள்: வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன்,

ஒளிப்பதிவு: விந்தன் ஸ்டாலின்

இசை: மனோஜ் கிருஷ்ணா

இயக்கம்: சிவா ஆர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.