வால்வாட்சர் பிலிம்ஸ் – புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லா, சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கெளரி கிஷன், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சுழல் 2’ 8 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.
சுழல் முதல் பாகத்தில் சித்தப்பாவை கொலை செய்த குற்றத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் அடைக்கப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் லால் நீதிமன்றத்தில் வாதாடுகிறார். எதிர்பாராத விதமாக வக்கீல் லால் கொலை செய்யப்படுகிறார்.
இந்த வழக்கு முதன்மை விசாரணை அதிகாரியாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். அப்போது லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், உள்ளே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்க அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள உண்மையை சொல்ல மறுக்கிறார் கெளரி கிஷன்
இந்நிலையில் மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைகிறார்கள். இவர்களை அனைarவரும் ஒரே மாதிரியான காரணத்தை கூறுகிறார்கள். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கதிருக்கு உண்மையான குற்றவாளி யார் என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
இறுதியில் கதிர் உண்மையான குற்றவாளி யார் ? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் இருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே ’சுழல் 2’ வெப் சீரிஸ் மீதிக்கதை.
கதிர். சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கதிர் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து . இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்த குற்ற உணர்வுடன் இருப்பவர் கதாபத்திரத்தில் இவரது நடிப்பு நியாகம் சேர்க்கும் விதத்தில் இருந்தது.
வக்கீலாக வரும் லால் நடிப்பு அருமை .காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் இருந்தது இவரது நடிப்பு மஞ்சிமா மோகன் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அது நிறைவாக செய்திருக்கிறார். கௌரி கிஷன் உள்ளிட்ட 7 பெண்களின் நடிப்பு கவனம் பெறும் விதத்தில் உள்ளது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து ‘சுழல் 2’ இணையத் தொடரை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.புஷ்கர் காயத்ரி இருவரும் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இயக்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ’சுழல் 2’ வெற்றி பாதை
மதிப்பீடு ; 4/5
நடிகர்கள் : கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லா, சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கெளரி கிஷன்
இசை: சாம் சி எஸ்
இயக்கம்: பிரம்மா & சர்ஜூன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply