அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. 

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்  அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., 

எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ் சார், சம்யுக்தா மேடம் ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது. ஆனாலும் வருடத்திற்கு வருடம் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரைப்படம் மீது இருக்கும் மோகம் தான் இதற்குக்  காரணம். நாம் தினசரி செய்தித்தாளில்  படிக்கும் ஒரு விசயத்தை, அது நிஜத்தில் நடந்திருந்தால் என்னவாகும் என்பது தான் இப்படம். கண்டிப்பாக மக்கள் ரசிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. 

நடிகை ஆராதியா பேசியதாவது.., 

எல்லோருக்கும் வணக்கம். நான் திரையில் நன்றாக நடிக்க என்னோட டீமின் உழைப்பு தான் காரணம். என் இயக்குநர் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த தேவா சாரின் இசையில் எனக்கு  நாளாவது படம் நன்றி சார். ஆனந்த்ராஜ்  சாரை சின்ன வயதிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன், அவருடன் நடித்தது மகிழ்ச்சி.  சம்யுக்தா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ஆங்கிலோ இண்டியன் கேரக்டர், ஆனால் ஒரு தமிழ்பெண்ணான என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. மாரி செல்வராஜ் இண்டர்வியூவில் டெடிக்கேடிவாக இருந்ததால் நடிகைகளை மலையாளம் எனப் பார்க்காமல் நடிக்க வைத்தேன் என சொல்லியிருந்தார். நாங்களும் டெடிக்கேடிவாக தான் நடிக்கிறோம். தமிழிலும் நல்ல நடிகைகள் இருக்கிறோம் அவரது பார்வைக்குச் செல்லவில்லை என நினைக்கிறேன். பத்திரிகைகள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி. 

நடிகை தீபா பேசியதாவது.., 

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நானும் சின்ன பிள்ளையிலிருந்து ஆனந்த்ராஜ் சாரை பார்த்து வருகிறேன். அவருக்கு மனைவியாக நடித்துள்ளேன். படத்தில் தான் வில்லன், நிஜத்தில் அவர் குழந்தை. இந்தப்படம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. மண், பெண், பொன் மூன்றைத் தேடித் தான் மனிதன் அலைகிறான். மனிதன் தேடித் தேடி அலைந்து வாழ்வை தொலைக்கிறான் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியுள்ளார்கள். இப்படத்தில் நான் ஒரு மனைவி இன்னொரு மனைவி வந்தால் என்னாகும் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார்கள் படம் உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. 

நடிகை ஷகீலா பேசியதாவது.., 

இப்படத்தில் மிக அழகான ஒரு கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் முகுந்தன் அவர்களுக்கு நன்றி. தோழி விஷ்ணுபிரியா தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். எனக்கு மேடை மேல் பேச பயம், ஆனால் ஆராதியா வேற லெவலில் பேசினார். என்னையும் எல்லோரும் சின்ன வயதிலிருந்து பார்த்து ரசிப்பதாகச் சொல்வார்கள், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஆனந்த்ராஜ் அண்ணா, நமக்கு எப்போதும் சின்ன வயசு தான். இந்தப்படம் கண்டிப்பாக மக்களுக்குப் பிடிக்கும். நன்றி. 

நடிகை சம்யுக்தா பேசியதாவது.., 

தயாரிப்பாளர் அண்ணாதுரை சார் அதிகம் பேசி இன்று தான் கேட்டேன். அவர் மிக அமைதியான மனிதர். மிக நல்ல குணம் கொண்டவர், அவர் மனதுக்கு இப்படம் ஜெயிக்க வேண்டும். முகுந்தன் இப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் தாங்கியுள்ளார். ஆராதியா சொன்னது உண்மைதான். இன்று திரை வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு பிரச்சனையாக உள்ளது. கலர், மொழி, மட்டுமல்ல, திருமணம் ஆகியிருந்தால் நடிக்கக் கூப்பிடமாட்டார்கள். இது மாற வேண்டும். ஆனந்த்ராஜ் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் மிக ஜாலியானவர். எங்கள் எல்லோரையும் எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்வார். ஷகீலா மேடம் வேற லெவல் காமெடி செய்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா நல்ல இசையைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது.., 

இப்படத்தை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.  ஒரு படத்தின் பாடல்கள் ஹிட்டாக முக்கிய காரணம் வரிகள் தான் பாடலாசிரியர் கு கார்த்திக் அவர்களுக்கு என் நன்றிகள். படத்தில் இரண்டு பாடல்தான், ஒரு இடத்தில் இன்னொரு பாடல் வைக்கலாம் எனத் தோன்றியது முகுந்தன் சார் பட்ஜெட் இடிக்கும் என்றார், நான் செய்து தருகிறேன் என்று செய்துள்ளேன். முகுந்தன் முதல் படத்திலேயே எல்லா கமர்ஷியல் அம்சங்களும் படத்தை அழகாக இயக்கியுள்ளார். ஆனந்த்ராஜ் மிக நன்றாகச் செய்துள்ளார் அவருக்கு நானும் ரசிகன். இந்தப்படத்தில் அப்பா ஒரு பாடல் பாடியுள்ளார். முதல் படம் எடுக்கும் அண்ணாதுரை சார், நீங்கள் தொடர்ந்து படமெடுப்பீர்கள் வாழ்த்துக்கள். மீடியா நண்பர்கள் இப்படத்தைப் பற்றி நன்றாக எழுதுங்கள் நன்றி. 

இயக்குநர் பேரரசு பேசியதாவது.., 

நான் கைக்குழந்தையாக இருக்கும் போது அம்மா என்னை அழைத்துப் போன படம் ஆனந்த்ராஜ் படம் தான். அவர் படங்கள் பார்த்துத் தான் வளர்ந்தேன். ஶ்ரீகாந்த் தேவா பாடல்களில் அசத்திவிடுவார். மெலடி பாடல் கேட்டால் மட்டும் எனக்கு போட்டு தர மாட்டார். சிவகாசி படத்தில் ஒரு அழகான மெலடி பாடல் தந்தார் ஆனால் அதைப் படத்தில் வைக்கவில்லை. நான் படத்தில் வைக்கமாட்டேன் என மெலடி போட்டுத்தர மாட்டார். ஆராதியா தீயாக பேசினார். எந்த பயமும் இல்லாமல் பேசினார். தமிழில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். ஆனந்த்ராஜ் சாரை அப்போதெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கும் அவர் ஹீயுமர் செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போது பார்க்கும் போது புன்னகை வருகிறது. இந்தப்பட வெற்றிக்குப்பிறகு மதுரை மாஃபியா கம்பெனி, கோவை மாஃபியா கம்பெனி எனத் தொடர்ந்து நடிக்க வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

Leave a Reply

Your email address will not be published.