“கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்த நடிகர்கள், காலம் காலமாக தமிழ் திரை ரசிகர்களின் இதயத்தையும், அவர்களின் சினிமா ருசியையும் வென்றுள்ளனர். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி, “தமிழ்நாட்டின் சொந்த மகன்” என்ற அன்பு பெயரைப் பெற்ற நடிகர்கள் வரிசையில், அர்ஜூன் அசோகன் இப்போது இணைகிறார்.
*ரோமாஞ்சம்* மற்றும் *தளவரா* போன்று சிறப்பாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் அவர் காட்டிய நடிப்பு, ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் தனது நேரடி தமிழ் அறிமுகத்தை ப்ரோ கோட் (Bro Code) மூலம் செய்ய தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த முயற்சி “சத்தா பச்சா” படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நேரத்திலேயே, அந்த டீசர் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இயல்பான சுறுசுறுப்பு மற்றும் நகைச்சுவை நயத்திற்காக பிரபலமான அர்ஜூன் அசோகன், இந்த முறை முற்றிலும் புதிய கோணத்தில், அதிரடி கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அவருடன் இணைந்து ரோஷன் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விசாக் நாயர் மற்றும் இஷான் ஷவுகத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிககின்றனர்.
ஷிஹான் ஷவுகத் மற்றும் ரிதேஷ் எஸ் ராமகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கும் “சத்தா பச்சா”, அத்வைத் நாயர் இயக்கும் படமாகும். அவர் இந்த படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அனேந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்; ஜோமன் டி. ஜான் மற்றும் சுதீப் எலமோன் இணை ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சனூப் தைகூடம் எழுதியுள்ளார். இவரது எழுத்து நகைச்சுவை மற்றும் கதையின் ஆழத்தையும் சமநிலையில் இணைக்கும் வல்லமை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இசைத் துறையில் புகழ்பெற்ற மூவர் சங்கர் – ஏஹ்சான் – லாய் இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை முஜீப் மஜீத் உருவாக்கியுள்ளார்.
டீசரில், “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” திரைப்படம் வருகிற 2026 ஜனவரி மாத வாக்கில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply