நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’
யூடியூப்பில் நெகடிவாக சினிமா விமர்சனம் செய்யபவர்களை ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்கிற்கு அழைத்து பேயாக இருக்கும் செல்வராகவன் கொலை செய்து வருகிறார்
இந்நிலைல்யில் யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.
அந்த திரையரங்கிற்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து திரும்ப வீட்டிற்கு வந்து விடுகிறார்.சிறப்பு திரையிடல் அழைப்பின் பேரில் அவரது குடும்பத்தை சேர்ந்த அப்பா நிழல்கள் ரவி அம்மா கஸ்தூரி தங்கை யாஷிகா ஆனந்த் மற்றும் காதலி கீதிகா திவாரி ஆகியோர் திரையரங்கிற்கு சென்றிருப்பதை அறியும் சந்தானம் .அவர்களை காப்பாற்ற அங்கு செல்கிறார்.
அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். இதனையடுத்து செல்வராகவனிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் சந்தானம்,
இறுதியில் சந்தானம் இந்த பிரச்சனையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக்கதை.
சினிமா யூடியூப் விமர்சகராக நடித்திருக்கும் சந்தானம் தனக்கே உரிய பாணியில் நடித்து காமெடியில் அசத்தி இருக்கிறார் காதல்,காமெடி,சண்டை,நடனம் என அனைத்ததிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலி மற்றும் பேயாக நடித்திருக்கும் நாயகி கீதிகா திவாரி நடிப்பு கவனிக்கும் விதத்தில் இருந்தது. மொட்டை ராஜேந்திரன் சந்தானத்தின் காமெடி படத்திற்கு பலம் சேர்க்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், பேயாக வரும் செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மாறன், ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. தீபக் குமார் பதி ஒளிப்பதிவு காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் குடும்பத்தை நாயகன் எப்படி புத்திசாலித்தனமாக காப்பாற்றுகிறார் என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த் வழக்கமான பேய் போல இல்லாமல் வித்யாசமான முறையில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – வேற லெவல்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி,
இசை : ஆப்ரோ
இயக்கம்: எஸ் பிரேம் ஆனந்த்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply