ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓஹோ எந்தன் பேபி’
உதவி இயக்குனரான ருத்ரா நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்வதற்கான வாய்ப்பு மேலாளர் ரெடின் கிங்ஸ்லி முலம் கிடைக்கிறது. ருத்ரா நடிகர் விஷ்ணு விஷாலிடம் இரண்டு கதைகளை சொல்ல அது விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போகிறது. இன்றைய டிரெண்டிங்கிற்கு ஏற்றாற் போல் ஏதேனும் காதல் கதை இருந்தால் சொல்ல சொல்கிறார்.விஷ்ணு விஷால்
சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல் அனுபவத்தை கதையாக விஷ்ணு விஷாலிடம் ருத்ரா சொல்கிறார் . இந்தக் கதை நன்றாக இருக்கிறது. இதனை முழு திரைக்கதை வடிவமாக மாற்றி எடுத்து வந்தால் நான் நடிக்கிறேன் என கூறி விடுகிறார் விஷ்ணு விஷால்.
ருத்ராவால் அந்தக் கதையை முழுமையாக எழுத முடிந்ததா ? இல்லையா? ருத்ரா இயக்குநர் கனவு நனவானதா? இல்லையா? என்பதே ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் மீதிக்கதை.
நடிகராக வரும் விஷ்ணு விஷால் அனுபவ நடிப்பின் மூலம் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரும் ரசிக்கும் விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் . குறிப்பாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவரது நடிப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது.
அறிமுக நாயகனாக நடித்திருக்கும் ருத்ரா அறிமுக நாயகனாக இல்லாமல் எதார்த்த நாயகனாக நடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி, வாலிபர் என ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு உடல்மொழி முலம் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மிதிலா பால்கர் பார்ப்பதற்கு அழகாகவும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது. சித்தப்பாவாக வரும் கருணாகரன், , ரெடின் கிங்ஸ்லி, கீதா கைலாசம் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்றவாறு உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஹரிஷ் கல்யாண் ஒளிப்பதிவு படத்ததிற்கு கொடுத்தால் பலம்,
காதல் கதையை மையமாக வைத்து நகைசுவை கலந்து அனைவரும் ரசிக்கவும் சிரிக்கவும் விதத்தில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இத்திரைப்படத்தில் காதல், காமெடி, ரொமான்ஸ் என அனைத்தையும் கலந்து கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஓஹோ எந்தன் பேபி’- இன்றைய காதல்
மதிப்பீடு : 3.30/5
நடிகர்கள் : விஷ்ணு விஷால், ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன்
இசை : ஜென் மார்ட்டின்
இயக்கம் : கிருஷ்ணகுமார் ராமகுமார்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply