71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள பலரும் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு ஒன்றிணைந்து விருதுகள் பெற்றனர்.

தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து அங்கீகாரம் பெற்றவர்கள்:

  • ஜிவி பிரகாஷ் குமார்- ‘வாத்தி’ படத்திற்காக (தெகுங்கு),
  • கே. எஸ். சினீஷ்- சிறந்த பிராந்திய மொழி தயாரிப்பாளர் ‘பார்க்கிங்’ படத்திற்காக (தமிழ்),
  • எம்.எஸ். பாஸ்கர் – சிறந்த துணை நடிகர் ‘பார்க்கிங்’ படத்திற்காக,
  • ராம்குமார் பாலகிருஷ்ணன்- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை ‘பார்க்கிங்’ படத்திற்காக,
  • ராஜகிருஷ்ணன்- சிறந்த ஆடியோகிராஃபி (ரீ-ரெக்கார்டிங்) ‘அனிமல்’ படத்திற்காக,
  • சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் – சிறந்த ஒலி வடிவமைப்பு ‘அனிமல்’ படத்திற்காக,

இந்தப் பட்டியல் தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் இந்திய சினிமாவில் தமிழ் சினிமா கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், தமிழ் சினிமா வெற்றியாளர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்திருப்பதும் அவர்கள் ஒற்றுமையை காட்டுகிறது. தங்களின் சினிமா பயணத்தில் இதனை பெருமைமிகு தருணமாக கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுக்கும் தமிழ் சினிமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.