யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயரோகணம், பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகனசுந்தரம், கவின், ஜனனி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஃபேமிலி படம்’
இந்நிலையில் நாயகன் உதய் கார்த்திக் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இதனையடுத்து .தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறி அந்த கதை அவருக்கு பிடித்தும் போக உடனடியாக ஒப்பந்தம் பதிவு செய்து அட்வான்ஸ் பெற்றுக்கொள்கிறார் நாயகன் உதய் கார்த்திக்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இந்நிலையில் சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது.
இதனையடுத்து தம்பிக்காக படத்தை தயாரிக்க குடும்பமே தயாராகிறது. இறுதியில் நாயகன் உதய் கார்த்திக் திரைப்படத்தை இயக்கினாரா? இல்லையா? அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ’ஃபேமிலி படம்’ படத்தின் மீதிக்கதை.
தமிழ் என்ற கதாபத்திரத்தில் லட்சிய மிக்க இளைஞ்ராக வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷா சின்னத்திரையில் வில்லியாக வருபவர் இத்திரைப்படம் மூலம் கதாநாயகியாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
அண்ணன்களாக நடித்த விவேக் பிரசன்னா மற்றும் பார்த்திபன் குமார் இருவரும் தங்களது கதாபாத்திரங்களை தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
அனீவி இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. மெயேந்திரனின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் செல்வ குமார் திருமாறன் ஒற்றுமையே வெற்றிக்கு பலம் எனும் மைய கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஃபேமிலி படம்’ குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : : உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா காயரோகணம், பார்த்திபன் குமார், ஸ்ரீஜா ரவி, மோகனசுந்தரம், கவின், ஜனனி
இசை : அனிவி
இயக்கம் : செல்வகுமார் திருமாரன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply