ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதிஷ், பவித்ரா லட்சுமி , .ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோ பாலா, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய் சேகர்’

ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஷ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஜார்ஜ் ஆராய்ச்சிக்காக படையப்பா என்ற நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் சதிஸை கடித்து விடுகிறது. இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஜார்ஜ் மாற்று மருந்து கண்டுபிடித்த நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா ? இல்லையா என்பதே நாய் சேகர்’ படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் சதீஷ் காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை நிரூபித்திருக்கிறார். கதாநாயகி பவித்ரா லட்சுமி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய்க்கு மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்மந்தம், மனோபாலா, லொள்ளு சபா மாறன், பாலா ஆகியோருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அறிமுக இசையமைப்பாளர் அஜிஷ் மற்றும் அனிருத் ஆகியோரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகமே. பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு பயணம் செய்திருக்கிறது. பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு சேர்க்கிறது

அனிருத்தின் இசையில் வந்திருக்கும் பாடல் முணுமுணுக்க வைக்கிறது. சாண்டி மாஸ்டரின் நாய் ஸ்டைல் நடனம் ரசிக்க வைக்கிறது. இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து இறுதியில் சிரிப்போடு முடித்து இருக்கிறார். கதாபாத்திரங்களில் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

“காமெடி படத்திலும், பேண்டஸி படத்திலும் லாஜிக் பார்க்க கூடாது” என்ற டைடில் கார்டு போட்டு படத்தை ஆரம்பிக்கும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் ஜாலியான நிறைவான சினிமாவாக வந்திருக்கும் நாய் சேகரை தாராளமாக இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்

மொத்தத்தில் நாய் சேகர்’ காமெடி விருந்து.

நடிகர்கள் : சதிஷ், பவித்ரா லட்சுமி , .ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன்,

இசை அஜீஷும் மற்றும் அனிருத்

இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.

Leave a Reply

Your email address will not be published.