கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி ம ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’
தென்நாடு ஊரை சேர்ந்தவர் சத்யராஜ் – சரண்யா தம்பதிகளின் மகன் சூர்யா வக்கீலாக இருக்கிறார். வடநாடு ஊரை சேர்ந்த வினய் சூர்யா ஊர் பெண்களை காதல் வலையில் விழவைத்து ஆபாச படம் எடுப்பது என படு மோசமான காரியங்களை செய்வதால் அடுத்தடுத்து இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதன் காரணத்தை அறிய முற்படும் போது சூர்யாவின் குடும்பமும் வினய் பிடியில் சிக்கி கொள்கிறது இறுதியில் சூர்யா வினயிடம் இருந்து ஊர் பெண்கள் மனத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மீதிக்கதை.
வக்கீலாக நடித்திருக்கும் சூர்யா, காதல், பாசம், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார். கோட்டு போடட்டா வக்கீல், வேட்டி கட்டுனா ஜட்ஜ் என்ற பஞ்ச டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுகிறார். சூர்யா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும், அதிரடியான சண்டைக் காட்சிகளையும் கண்டு தியேட்டர் அதிர்கிறது
நாயகியாக வரும் பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பெண்களை காம கண்களோடு பார்ப்பவர்களையும், ஆபாச வீடியோக்களை அசிங்கமற்றதாக எண்ணி ரசிப்பவர்களைப் பற்றி பேசும் வசனம் அருமை
இன்பாவாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் வினய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் தங்களின் பங்களிப்பை நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார்கள் சூரி, புகழ் ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குப் பலம். சேர்க்கிறது.
குடும்ப உறவு, காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் அளவாக வைத்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ் ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ வெற்றி நிச்சயம்
நடிகர்கள் : சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி மற்றும் பலர்
இசை: இமான்
இயக்கம்: பாண்டிராஜ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply