எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.ஸ்ரீதர் தயாரிப்பில் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில்  நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவ ஷாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் O2

நயன்தாராவின் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் பட்டு வருகிறார்.  எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வாழ்ந்து வரும் அந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்காக கோவையில் இருந்து கொச்சிக்கு பேருந்து மூலம் செல்கிறார். பேருந்து செல்லும் வழியில் ஏற்படும் நிலச்சரிவால் பேருந்து சிக்கி மண்ணுக்குள் புதைந்து விடுகிறது.

இந்த விபத்தில் நயன்தாரா, தனது குழந்தை, பேருந்து ஓட்டுனர் உட்பட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பேருந்தில் சிக்கி கொண்ட அவர்கள் தப்பித்தார்களா?  இல்லையா? நயன்தாராவின் குழந்தைக்கு சிகிச்சை நடைபெற்றதா? இல்லையா? என்பதே O2 படத்தின்  மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, தனது குழந்தைக்காக போராடும் காட்சிகளில் புலியாக நடித்திருப்பதோடு, தனது குழந்தையின் மீது காட்டும் அக்கறை, பாசம், பரிதவிப்பு என அனைத்து உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.

நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்துள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார். பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஆடுகளம் முருகதாஸ் என படத்தில் நடித்திருக்கும அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் எழுதி இயக்கியிருக்கிறார். மிக சவாலான கதைக்களத்திற்கு சாமர்த்தியமான திரைக்கதை அமைத்திருப்பவர், எந்த இடத்திலும் ரசிகர்களின் கவனம் சிதறாத வகையில் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்.  படம் தொடங்கிய 20 நிமிடங்களில் துவங்கும் த்ரில்லிங்கை க்ளைமாக்ஸ் வரை கொஞ்சமும் குறையாமல் கொண்டு சென்றுள்ளார் டைரக்டர். அதிலும் தாய் பாசம் என்பதை தாண்டி, ஆக்சிஜன் தேவையின் அவசியத்தையும், இயற்கையை காக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில்   ‘O2’ஆக்சிஜன்  அவசியத்தை  சொல்லும் படம்

நடிகர்கள் :  நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர்,

இசை: விஷால் சந்திரசேகர்

இயக்கம்:  ஜி.எஸ்.விக்னேஷ்

மக்கள் தொடர்பு : சதிஷ்

Leave a Reply

Your email address will not be published.