அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் .எம் இயக்கத்தில் தயாரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரஞ்சு ( பெர்ஸியன்), ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

சென்னை ஜூன் 17 2022 :  அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடராகவும், நீண்ட வடிவத்தில் திரைக்கதை அமைக்கப்பட்ட அசல் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’  வெளியாகியிருக்கிறது. தமிழில் உருவான இந்த தொடரை சென்னையில் பொதுமக்களும், பார்வையாளர்களும் குழுமியிருக்கும் பகுதியில் பிரபலப்படுத்த படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலா பயணிகளின் முதன்மையான விருப்பமாகவும் உள்ள சேத்துப்பட்டு சூழலியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்டமான ஏரியில், வாட்டர் ஸ்கிரீன் தொழில்நுட்பம் என்ற நவீன திரையிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரின் சில பிரத்யேக காட்சிகள் திரையிடப்பட்டன. இது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. முப்பரிமாண தொழில்நுட்பம், பல அடுக்குகளைக் கொண்ட லேசர் தொழில்நுட்பம் மற்றும் தொடரின் மைய கரு ஆகியவற்றை ஒருங்கிணைந்த இந்த திரையிடல், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வியப்பை ஏற்படுத்தியது.

இந்த தொடரின் முன்னுரையை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ஷெட்டி, நடிகர் கதிர், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம், படைப்பாளிகள் புஷ்கர் & காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டனர். இதுவரை இத்தகைய 3டி வாட்டர் ஸ்கிரீன் புரொஜக்சன் தொழில்நுட்பம் வேறு எந்த தொடருக்கும் மேற்கொள்ளாததால், இதனை இரவு நேரத்தில், ஏரியில் அமைதியாக இருந்த தண்ணீருக்குள் இந்தத் தொடரின் காட்சிகள் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்கள் முற்றிலும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்

Leave a Reply

Your email address will not be published.