கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா சங்கர், இயக்குநர் நிதின் வேமுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கூரன்’
கொடைக்கானலில் தாய் நாய் தனது குட்டியுடன் சாலை ஓரமாக சென்று கொண்டியிருக்க மது போதையில் காரை ஒட்டி வரும் நிதின் குட்டி நாய் மீது காரை ஏற்றிவிட அந்த குட்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறது.
இதனையடுத்து தாய் நாய் காவல் நிலையம் செல்கிறது. 10 வருடங்களாக பிரபல வக்கீலாக இருக்கும் சந்திரசேகர் எதேச்சையாக காவல் நிலையம் வர அங்கு இருக்கும் தாய் நாயின் உணர்வை புரிந்துக் கொண்டு நாயின் புகாரை காவல்துறை ஏற்க வைப்பதோடு, அந்த வழக்கில் தாய் நாய்க்கு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டி நீதி மன்றம் செல்கிறார்.
இறுதியில் நீதி மன்றத்தில் தாய் நாயின் வழக்கை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? வழக்கறிஞர் சந்திரசேகர் தாய் நாய்க்கு நீதி வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே ’கூரன்’ படத்தின் மீதிக்கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அனுபவ நடிப்பின் மூலம் நுறு சதவீதம் அந்த கதாபத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது .
நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சத்யன், பார்வையற்றவராக ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்/
இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.
சட்டம் அனைவரும் சமம் என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி நீதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’கூரன்’ நீதி தேவன்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா
இசை : சித்தார்த் விபின்
இயக்கம் : நிதின் வேமுபதி
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன் & உதய்
Leave a Reply