அய்யா சிவ சிவ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எல்.உதயகுமார் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஆனந்த், மேக்னா ராஜ், சிவ தினேஷ் ஆகிய இளம் நடிகர்களுடன், நிரோஷா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, இளவரசு, இராஜேந்திரநாத், ரவிராகுல், சூசன் ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஒரு குடைக்குள்’

நாராயணசாமியின் தீவிர பக்தையாக இருக்கும் மேக்னா ராஜின் குடும்பத்திற்குள் ஒருவராக நுழைகிறார். சிறுவனாக அவதாரம் எடுக்கும் வைகுண்டர் சிவ தினேஷ் அந்த ஊர் மக்களுக்கு தெரியாமலே அவர்கள் வாழ்வில் பல அற்புதங்களை செய்து வரும் அவதார சிறுவனான சிவ தினேஷ், மேக்னா ராஜுக்கு கிருஷ்ணராக தரிசனம் தருவதோடு, அவருக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தில் இருந்து அவரை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்.இதனால், மேக்னா ராஜின் குடும்பத்தார் சிறுவன் சிவ தினேஷை திட்டி வீட்டை விட்டு வெளியேற்ற,
இதே சமயம் அரக்கர்கள் ஓலைச்சுவடிக்காக நாயகி மேக்னாராஜை தேடி வருகிறார்கள். இதையறிந்த சிறுவன் சிவ தினேஷ், அரக்கர்களிடம் இருந்து மேக்னாராஜை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

வைகுண்டரின் தீவிர பக்தையாக தாட்சாயணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மேக்னா ராஜ், எளிமையான அழகோடும், இயல்பான நடிப்போடும் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அவதார சிறுவனாக நடித்திருக்கும் சிவ தினேஷ், வைகுண்டரின் அவதாரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களை வைகுண்டரின் பக்தர்களாக்கி விடுகிறார். அசுரக்குல பெண்ணாக நடித்திருக்கும் சூசன் ஜார்ஜ், ‘மைனா’ படத்திற்கு பிறகு கவனிக்கும்படியான கதாப்பாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். இளவரசு, நிரோஷா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ரவிராகுல் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு, கதாப்பாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் தேவாவின் பாடலும், பின்னணி இசையும் ஆன்மீக அருவியில் குளித்த அனுபவத்தை கொடுக்கிறது. காட்சிகளை தரமாக கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் வி.இராஜேந்திரன், கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார்.

பூவண்டன் தோப்பு என்னும் சாமி தோப்பில் ஶ்ரீமன் நாராயண வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களை வரலாறாக எடுத்துச் சொல்லும் விதமாக ‘ஒரு குடைக்குள்’ படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வைகுண்டரின் அதிசயங்களை பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் இனியமையான ஆன்மீக படமாக இப்படத்தை இயக்குநர் கே.எல்.உதயகுமார் இயக்கியிருந்தாலும், அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.

வைகுண்டர் நிகழ்த்திய அதிசயங்கள் பல உண்டு என்பதால், இரண்டு பாகங்களாக இப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர், இரண்டாம் பாகம் எப்போது வரும், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில், முதல் பாகத்தை முடித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘ஒரு குடைக்குள்’கடவுளின் அருள்

நடிகர்கள் : ஆனந்த், மேக்னா ராஜ், சிவ தினேஷ்
இசை தேவா
இயக்குனர் கே.எல்.உதயகுமார்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

Leave a Reply

Your email address will not be published.