: டுவின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பன், ‘ஆடுகளம்’ முருகதாஸ் , திலீபன், தங்கதுரை, ஷரவண சுப்பையா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டென் ஹவர்ஸ்’
சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சிபிராஜ் நேர்மையானவர் இதே சமயம் கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி அந்த பெண்ணை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார். இதே வேளையில் சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாக போலீசுக்கு ஒருவர் தகவல் கொடுக்கிறார்.
இதனையடுத்து அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.பெண் கடத்தல் மற்றும் பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர், சிபிராஜ்
இறுதியில் பெண் கடத்தல் மற்றும் இளைஞர் கொலை இந்த இரண்டு வழக்குகளுக்கு உள்ள தொடர்பு என்ன ? கொலையாளி யார்? என்பதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
காஸ்ட்ரோ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிபி சத்யராஜ், காக்கி உடையில் கம்பீரமாக வளம் வருகிறார். அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, பேருந்தில் கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் இருக்கிறது. ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
பெண் கடத்தல் மற்றும் இளைஞர் கொலை ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் இந்த கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘டென் ஹவர்ஸ்’ – கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்
ம்சதிப்பீடு : 3.3/5
நடிகர்கள் : சிபி சத்யராஜ், கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பன், ‘ஆடுகளம்’ முருகதாஸ் , திலீபன், தங்கதுரை, ஷரவண சுப்பையா
இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
இயக்கம் : இளையராஜா கலியபெருமாள்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply