சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீராபுரம்’
கிராமத்தில் உணவகம் நடத்தி வரும் நாயகன் மகேஷின் தந்தை, மகேஷ் மற்றும் நண்பர்கள் நால்வரும் ஊரில் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவரின் திருமணம் நண்பர்களின் போதைப்பழக்கத்தால் தடைபட்டு விடுகிறது. இதனால் ஐந்து நண்பர்கள், நால்வராகின்றனர். அதில், அங்காடித் தெரு மகேஷ் நாயகி மேக்னாவின் பின்னால் சுற்றி திரிகிறார்.
இந்நிலையில், ஊரில் அவ்வப்போது மர்மமான முறையில் விபத்துகள் ஏற்பட்டு பலர் மரணமடைகின்றனர்.
அப்படியாக ஒரு விபத்தில் மகேஷின் தந்தையும் இறந்துவிடுகிறார்.தந்தையை கொன்றவர்களை நாயகன் கண்டுபிடித்தாரா ?நண்பர்களின் ஒற்றுமை என்னவானது.? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் மகேஷ் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார். வேகமும், வீரமும் நிறைந்த கிராமத்து இளைஞராக வலம் வரும் மகேஷுன் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருப்பதோடு, கூடுதல் அழகோடும் இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சதீஷ் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளலாம். வில்லனுக்கே உரித்தான முகத்தோடு அதிர வைத்திருக்கிறார்.
ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்களின் இசையில் பாடல்கள் கேட்டும் ரகம்.. கிராமத்தை மிகவும் அழகாக ஒளிப்பதிவு செய்து காட்டியிருக்கிறார் பிரேம்குமார்
கதை எழுதி இயக்கியிருக்கும் பி.எஸ்.செந்தில்குமார், முதல் படத்திலேயே சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
மொத்தத்தில், ‘வீராபுரம்’ வெற்றி பெரும் .
Leave a Reply