அனூப் கஹாலித் தயாரிப்பில் சுனிஸ் குமார் இயக்கத்தில் : பரத், அனூப் கஹலித், விவியா சாந்த், அதில் இப்ராஹிம், அனுமோஹன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’
அனூப் காலித், அதில் இப்ராஹிம் , அனு மோகன் மற்றும் விவியா சந்த் இவர்கள் நான்கு பேர்களும் பெரிதாக கொள்ளையடித்து செட்டிலாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். கண் பார்வை இல்லாத பரத் வாழும் வீட்டில் கொள்ளை அடிக்கப் போகிறார்கள் பங்களாவுக்குள் நுழையும் அவர்கள் அங்குள்ள லாக்கரை தேடுகின்றனர். அப்போது எழும் சத்தத்தை கேட்டு உஷாராகிறார். பங்களாவிலிருக்கும் பரத்.
பரத்துக்கு பார்வை கிடையாது. ஆனாலும் நன்கு கேட்டும் திறன் இருப்பதால் சத்தம் வரும் திசைக்கு சென்று கொள்ளையடிக்க வந்த வர்களை அடித்து துவம்சம் செய்கி றார். ஒரு கட்டத்தில் அவர்களில் ஒருவரை சுட்டுக்கொள்கிறார்.இறுதியில் கொள்ளையடிக்க வந்தவர்களை பரத் சுட்டுக் கொள்வதற்கான காரணம் என்ன? என்பதே ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
பார்வையற்றவராக நடித்திருக்கும் பரத் இந்த வேடத்துக் காக உடலை கட்டுமஸ்த் தாக்கி நடித்துள்ளார்.
பங்களாவுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை அறிந்து அவர்களை தேடிச் செல்வதும் வசமாக சிக்கிய வரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் போது அதிர்ச்சி பரவுகிறது.
கொள்ளையர்களாக நடித்திருக்கும் அதில் இப்ராஹிம், விவியா , அனூப் கஹாலித் சக நடிகர்கள் வேடத்தை கச்சிதமாக செய்திருக்கின்றனர். கைலாஸ் மேனன் பின்னணி இசையும், சினு சித்தார்த் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு திகில் கூட்டுகிறது.
ஹாலிவுட் தரத்தில் பங்களாவிற்குள் நடக்கும் சில காட்சிகளை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் சுனிஸ்குமார் கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ சஸ்பென்ஸ் திரில்லர்
நடிகர்கள் : பரத், அனூப் கஹலித், விவியா சாந்த், அதில் இப்ராஹிம், அனுமோஹன்
இசை: கைலாஸ் மேனன்
இயக்கம்: சுனிஸ் குமார்
மக்கள் தொடர்பு : கே. குமரேசன்
Leave a Reply