Rain Of Arrows என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிப்பில் எஸ்.கே. வெற்றிசெல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, பம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், வித்யா பிரதிப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எண்ணித்துணிக’
அமைச்சர் சுனில் ரெட்டி நடத்தும் நகைக்கடை ஒன்றில் 2000 கோடி மதிப்புள்ள வைரத்தை கொள்ளையடிக்க வம்சி கிருஷ்ணாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இந்த கடையில் தன் திருமணத்துக்காக நகைகள் வாங்க ஜெய்யின் காதலி அதுல்யா வருகிறார்.
கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு நகைக்கடைக்குள் முகமூடி அணிந்து செல்லும் வம்சி அங்கு சிலரை சுட்டுக் கொன்றுவிட்டு வைரத்தையும் நகைகளையும் கொள்ளை யடித்துவிட்டு தப்பிச்செல்கின்றனர். காதலியை தாக்கிய கொள்ளையர்களை கண்டுபிடித்து பழிவாங்க களத்தில் இறங்கும் ஜெய், இறுதியில் கொள்ளையர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘எண்ணித்துணிக’ படத்த்தின் மீதிக்கதை.
ஜெய் வழக்கம் போல் தனது வேலையை முழுமையாக செய்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் எமோஷ்னல் காட்சிகளில் என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி அதுல்யா ரவிக்கு தைரியமான பெண்ணாகவும், துணிச்சலான பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.
முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சலி நாயர் படம் முழுவதும் வருவதோடு, கதையோடு பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக போராடும் அவரது நடிப்பு சிறப்பு. வில்லனாக நடித்திருக்கும் வம்சி மற்றும் சுரேஷ் சுப்ரமணியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வம்சியின் வில்லதனம் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
சாம் சி.எஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி இருக்கிறது.
இயக்குனர் எஸ்.கே. வெற்றிசெல்வன் ஒரு ஆக்ஷன் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லமுடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். வைரக்கற்களை தேடும் சர்வதேச மாஃபியா கும்பலை காட்டி படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் கொள்ளை சம்பவங்களின் போது அப்பாவி மக்கள் அநியாயமாக பாதிக்கப்படுவதையும், அதன் பின்னணியின் பயங்கரத்தையும் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
நடிகர்கள் : ஜெய், அதுல்யா ரவி, பம்சி கிருஷ்ணா, அஞ்சலி நாயர், வித்யா பிரதிப், மாரிமுத்து, சுனில் ரெட்டி,
இசை: சாம் சி.எஸ்
இயக்கம்: எஸ்.கே. வெற்றிசெல்வன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
Leave a Reply