மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை தயாரிப்பில் சாமி இயக்கத்தில் மாஸ்டர் மஹீன், பேபி தாவ்யா, வி.எஸ்.குமார், தாரா ஜெகதாம்பி, ஹரிஷ், மீனாட்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அக்கா குருவி’
கொடைக்கானல் பகுதி பூம்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் ஏழை தந்தைக்கு தேவா, சாரா என்ற பிள்ளைகள் உள்ளனர். வறுமையிலும் குழந்தைகளை கான்வென்ட்டி ல் படிக்க வைக்கிறார்.இருவரும் வெவ்வேறு பள்ளியில் படிக்கின்றனர். சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள். தேவா தனது ஷூவை தங்கைக்கு தந்து போட்டுச் செல்ல சொல்கிறான். அவள் பள்ளியிலிருந்து மதியம் வந்தவுடன் அதே ஷூவை தேவா பள்ளிக்கு போட்டுச் செல்கிறான்.இதனால் தினமும் பள்ளிக்கு லேட்டாக செல்கிறான். தலைமை ஆசிரியர் தேவாவை கண்டிக்கிறார்.
இந்நிலையில் பள்ளியில் ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. அந்த ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ஷூ பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இதனால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவன் ஷூவைப் பரிசாக வென்றாரா? இல்லையா ? என்பதே . ‘அக்கா குருவி’ படத்தின் மீதிக்கதை.
தேவாவாக நடித்திருக்கும் சிறுவன் மாஸ்டர் மஹீன், தங்கை சாராவாக நடித்திருக்கும் பேபி தாவ்யா, இருவரது நடிப்பில் அருமை.இருவரும் நடித்தது போல் தெரியவில்லை. இவர்களின் தந்தையாக வி.எஸ்.குமாருக்கு இது முதல் படம் என்பது திரையில் தெரிகிறது.
படத்திற்கு உயிராக இருந்து ஒலிக்கிறது இளையராஜாவின் பின்னணி இசை. பாசம், காதல், வெற்றி என படத்தின் அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்திருக்கும் இளையராஜா பாடல்களிலும் இன்னிசை விருந்து படைத்திருக்கிறார்.கொடைக்கானல் மலைப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு காட்சிகளை ஒளி ஓவியமாய் கண்களுக்குள் கடத்துகிறது உப்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு.
மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குநர் சாமி அக்கா குருவி படத்தை இயக்கியுள்ளார். உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சாமி, முற்றிலுமாக வேறுபட்டு, இரு குழந்தைகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு இயக்கியுள்ள படம் தான் ‘அக்கா குருவி’. நல்ல படம் தந்தமைக்காக அவருக்கு பாராட்டுகள்
மொத்தத்தில் ‘அக்கா குருவி’அண்னன் – தங்கை பாசம்
நடிங்கள் :: மாஸ்டர் மஹீன், பேபி தாவ்யா, வி.எஸ்.குமார், தாரா ஜெகதாம்பி, ஹரிஷ், மீனாட்சி
இசை : இளையராஜா
இயக்கம் : சாமி
மக்கள் தொடர்பு : : ஜான்சன்
Leave a Reply