UAN பிலிம் ஹவுஸ் சார்பில் ராஜதாஸ் குரியாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நட்டி ,, நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘யூகி’
கர்ப்பிணியாக இருக்கும் ஆனந்தி பேருந்து நிறுத்தத்தில் இருந்து திடீரெனக் காணாமல் போய்விடுகிறார்.ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான பிரதாப் போத்தன் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனிடம் ஆனந்தி பற்றிய தகவலை கொடுத்து கண்டுபிடித்து தர சொல்லுகிறார். அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அதே பெண்ணைத் தேடுகிறார் .இறுதியில் ஆனந்தி கிடைத்தாரா? இல்லையா? என்பதே ‘யூகி’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கதிர், வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமானதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் படத்தின் மையக்கருவாக மாறி அவர் காட்டும் அதிரடியும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் அற்புதம்.
கதையின் மையப்புள்ளி வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்தி தன் கணவருக்காக போராடும் போது நாம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கும் பெண்ணை நினைவுபடுத்துகிறார். இரண்டாம் பாதியில் தன்னுடைய நடிப்பால் திரைக்கதையை தாங்கி பிடித்து இருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறது.
டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நரேன், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிபிஐ அதிகாரியாக வரும் நட்டி,தன் அனுபவ நடிப்பால் அந்த வேடத்தை ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறார். மருத்துவராக நடித்திருக்கும் வினோதினி, ஜான் விஜய், பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா, பிரதாப் போத்தன் ஆகியோருக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ரஞ்சின் ராஜ் இசையில் பாடல்களை கேட்கும் ரகம்,. பின்னணி இசையை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் படத்தின் முதல் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை அனைத்து காட்சிகளிலும் சஸ்பென்ஸ் த்ரில்லர் உணர்வு இருக்கும்படி ஒளிப்பதிவு செய்திருப்பது படத்திற்கு மிகபபெரிய பலம்.
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை வேகமாக நகர்கிறது. ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் யூகி படத்தில் உள்ளது. மிகவும் சிக்கலான திரைக்கதை கொண்ட இந்த கதையை தனது முதல் படமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘யூகி’ யார் என்று யூகிக்க முடியாதவன்
நடிகர்கள் : கதிர், நட்டி ,, நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி
இசை : ரஞ்சன் ராஜின்
இயக்கம் : ஜாக் ஹாரிஸ்
சுரேஷ் சந்திரா, ரேகா (D’one)
Leave a Reply