மென்பனி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி,, வித்யா பிரதீப், முனிஸ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இன்ஃபினிட்டி’
கானத்தூர் காவல் நிலையத்திற்கு வரும் பெற்றோர்கள் தங்களின் மகள் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆகிறது என்று புகார் தருகிறார்கள். அதே நேரத்தில் 2 பேர் கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார்.
இதனைஎடுத்து இந்த வழக்கு சிபிஐ அதிகாரியான நட்டியிடம் கொடுக்கப்படுகிறது. சிபிஐ அதிகாரியான நட்டி இந்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார் . இறுதியில் இந்த தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன? , கொலையாளி யார்? என்பதை நட்டி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘இன்ஃபினிட்டி’ படத்தின் மீதிக்கதை.
சிபிஐ அதிகாரி வரும் நட்டி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் நட்டிக்கு உதவியாளர்களாக பணியாற்றும் முருகானந்தம் நடித்திருக்கிறார். டாக்டர் வேடத்தில் நடித்திருக்கும் வித்யா பிரதீப் சாந்தமான முகம், அமைதியான நடிப்பு என்று அறிமுகமானாலும், இறுதிகாட்சியில் அவர் கொடுக்கும் நடிப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
காவலர் வேடத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆதவன், கவனம் ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சார்லஸ் வினோத், ஜீவா ரவி, சிந்துஜா, கிருஷ்ணராஜு என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன்ஜி இசையில் உயிர் திறந்து பாடல் கேட்கும் இரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாளர் சர்வணன்ஸ்ரீ இரவு காட்சிகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார். இயக்குனர் கையில் எடுத்தது என்னவோ அழுத்தமான கதைதான். ஆனால், அதை திரைக்கதையாக கொண்டு செல்லும்போது சற்று தடுமாறியிருக்கிறார்
மொத்தத்தில் ‘இன்ஃபினிட்டி’ தொடர் கொலை
மதிப்பீடு 2.30 / 5
நடிகர்கள் : நட்டி,, வித்யா பிரதீப், முனிஸ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர்
இசை : பாலசுப்பிரமணியன்ஜி
இயக்கம் : சாய் கார்த்திக்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply