ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிப்பில்  சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில்  ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, சானியா அய்யப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’

சாலையோரத்தில் தள்ளுவண்டி உணவகம் ஒன்றை தனது தாயாருடன்  நடத்தி வருகிறார்  ஆர் ஜே பாலாஜி, இவர்களுக்கு அரசு அதிகாரி ஒருவர் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் அந்த அரசு உயர் அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மத்திய சிறைக்கு அனுப்பப்படுகிறார்  ஆர் ஜே பாலாஜி  

ரெளடியான செல்வராகவன் சிறைச்சாலையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.  தான் சிறைக்கு  வருவதற்கு செல்வராகவன் தான் காரணம் என்று என்னும் ஆர் ஜே பாலாஜி. செல்வராகவனை நேரில் சந்தித்து பேச நினைக்கிறார் .

செல்வராகவனுக்கு சிலன், கெண்ட்ரிக் மற்றும் டைகர் மணி மூவரும் விசுவாசமாக இருக்கின்றனர்.இந்த சூழ்நிலையில், செல்வராகவன் இனி எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்றெண்ணி மனம் திருந்துகிறார். அதேசமயம், புதிதாக சிறை அதிகாரியாக வரும் ஷரப் யுதீன்  ஆர் ஜே பாலாஜி வைத்து செல்வராகவனை கொலை செய்ய நினைக்கிறான்.

இந்நிலையில்  சிறையில் மர்மமான முறையில் செல்வராகவன் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து சிறையில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. இறுதியில் செல்வராகவனை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? சிறையில் இருந்து ஆர் ஜே பாலாஜி வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே ‘சொர்க்கவாசல்’  படத்தின் மீதிக்கதை.

பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி செய்யாத குற்றத்திற்கு  சிறைக்கு செல்லும் அப்பாவி இளைஞராக எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகியாக நடித்த சானியா ஐயப்பனுக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

சிகாமணி என்ற ரவுடி கதாபாத்திரத்தில் வரும்  செல்வராகவன், சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப் யுதீன், துணை அதிகாரியாக நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், ரவி ராகவேந்திரா,  பாலாஜி சக்திவேல் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் சிறைக்குள் நடக்கும் கலவரத்தை மிகவும் பிரமாண்டமாக  காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சென்னையில் மத்தியச் சிறையில் 1999ஆம் ஆண்டு பெரும் கலவரம் ஒன்று நடைபெற்றது. துணை ஜெயிலர் எரித்துக் கொல்லப்பட்டார், கலவரைத்தை அடக்க வந்த காவல்துறையினர் சுட்டதில் 9 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மையாக வைத்து திரைப்படத்ததை  சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்  இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத்

மொத்தத்தில் : ‘சொர்க்கவாசல்’ உண்மை முகம்

மதிப்பீடு : 3.5/5

நடிகர்கள் :  ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, சானியா அய்யப்பன், கருணாஸ்

இசை : கிறிஸ்டோ சேவியர்

இயக்கம் : சித்தார்த் விஷ்வநாத்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.